கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்த்தநிலையில் ஆட்சியமைக்க இருக்கும் பாஜக_விற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசியலில் கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததோடு தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தற்போது அங்கு எதிர் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதையொட்டி நேற்று அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெறும் என்றும், ஆதில் சட்டசபை கட்சி தலைவராக எடியூரப்பா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படட்டது.ஆனால் நேற்று பாஜகவின் MLA_க்கள் கூட்டம் நடைபெறவில்லை. மேலும் கர்நாடக மாநில குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் இன்னும் சபாநாயகரின் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே உள்ளனர்.
இதனால் கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பலம் இன்னும் நியமன உறுப்பினர்கள் உட்பட 225_ஆக உள்ளது.இதானால் சில சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் வரை ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று பாஜகவின் மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. இதனால் தான் நேற்று எடியூரப்பா டெல்லி உத்தரவுக்காக காத்திருக்கின்றோம் என்று பேட்டியளித்தார்.