நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதையடுத்து தற்போது புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அம்மாநில தமிழிசை சௌந்தரராஜன் விடுமுறை அறிவித்துள்ளார். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.