Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா… இதை கண்டிப்பாக போட்டு தான் ஆகணும்… மீறினால் அபராதம்..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் முககவசம் அணியாமல் சென்ற 14 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் பல்வேறு இடங்களில் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சிங்கம்புணரியில் மருத்துவ அலுவலர்கள் செந்தில்குமார், பரணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, ஒருங்கிணைந்த வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |