நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தவிர வேறு எந்தப் பள்ளி வகுப்புகளுக்கும் பள்ளிகளில் வைத்து தேர்வு நடத்தக்கூடாது என்று குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.