கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சரிவர விசாரிக்காமல் தடுப்பூசி செலுத்திய பெண் பேச்சு மூச்சின்றி கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவை சேர்ந்தவர் பிரண்டா வேலன் (95 வயது). இவர் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிரண்டா கனடாவில் பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு அருகில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்று 2 டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் பிரெண்டா காலில் அடிபட்டதான் காரணமாக நார்த் யார்க் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் இவர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுகொண்டுள்ளாரா? என்று சரிவர விசாரிக்காமல் இவருக்கு மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.இதனால் பிரண்டா தற்போது பேச்சு மூச்சில்லாமல் படுத்த படுக்கையாக உள்ளார். இதனிடையே தனது தாயின் இந்த நிலைக்கு மருத்துவமனையின் அலட்சியம்தான் காரணம் என்று ப்ரெண்டாவின் மகள் சிந்தியா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தனது தாயின் தற்போதைய நிலையால் அவரை முதியோர் இல்லத்திற்கு மாற்றினால் அவரை அதிக கவனம் செலுத்தி பார்க்கவேண்டும் என்பதால் மாதம் ரூ. 5,79,536 மேல் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் பிரெண்டாவின் தற்போதைய நிலைக்கு அவர் ஏற்கனவே போட்டு கொண்ட தடுப்பூசி தான் காரணமா? அல்லது மூன்றாவதாக செலுத்திய தடுப்பூசிதான் காரணமா? என்பது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.