Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இளையான்குடியில் மாசி களரி திருவிழா… சிறப்பாக நடைபெற்ற அலங்கார பூஜைகள்… பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை இளையான்குடி அருகே மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் மாசிகளரி திருவிழா கோட்டையூர் கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தல், அருள்வாக்கு பெறுதல், சாமி பாரி வேட்டை நடத்தி அருளாசியுடன் குறிகேட்டல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் இருளப்பன், கருப்பணசாமி, இருளாயி முனியசாமி, ராக்கச்சி, சோனையா ஆகிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகளும், அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்களும் கலந்து கொண்டனர். கோட்டையூர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு நீர்மோர், சர்பத் ஆகியவை வழங்கப்பட்டது. கோவில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை இளைஞர் அமைப்பினரும், கோட்டையூர் கிராம பொதுமக்களும் இணைந்து செய்திருந்தனர்.

Categories

Tech |