நடிகை ரைசா ஹாலிவுட் பட நடிகைகள் போல இருக்கிறார் என்று ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன். இதையடுத்து அவர் ஹரிஷ் கல்யானுடன் சேர்ந்து நடித்த “பியார் பிரேமா காதல்” அவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இவர் தற்போது காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா தனது புகைப்படத்தை அவ்வபோது இணையத்தில் பதிவிடுவார். அதேபோல் அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றது.
அதில், ரைசா பிளாக் விடோ படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சன் மற்றும் கேட் வுமன் படத்தில் வரும் ஹாலே பெர்ரி போன்று இருக்கிறார் என்று சொல்லி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.