Categories
அரசியல் தேசிய செய்திகள்

”அதிருப்தி MLA ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” கர்நாடக பாஜக வேண்டுகோள் …!!

கர்நாடகாவில் அதிருப்தி MLA_க்களின் ராஜினாமாவை ஏற்கும் படி பாஜகவினர் சபாநாயகரை வலியுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் குமாரசாமி அரசு கவிழ்ந்ததையடுத்து புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக  தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் குமாரசாமி அரசு கவிழ காரணமான அதிருப்தி MLA_க்கள் 15 பேரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் பரிசீலனையில் உள்ளதால் அந்த 15 பேரும் MLA _க்களாகவே உள்ளதால் கர்நாடக பாஜக பொறுமையாக காத்திருக்கின்றது.ஏனெனில் கர்நாடக மாநில சட்டப்பேரவையின் பலம் இன்னும் நியமன உறுப்பினர்கள் உட்பட 225_ஆக உள்ளது.

Image result for சபாநாயகர் ரமேஷ்குமார்

 

இதானால்  சில சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதால்  அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின்  ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கும் வரை ஆட்சி அமைக்க அவசரப்பட வேண்டாம் என்று பாஜகவின் மேலிட தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் இந்நிலையில் இதையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமாரை பெங்களூரு விதான சவுதாவில் பாஜகவை  சேர்ந்த மாதுசாமி MLA உள்பட முக்கிய நிர்வாகிகள் , அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரித்து , விரைவாக முடிவு எடுக்குமாறும்  சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |