இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் ஆன்லைனில் நாளை வெளியிடப்பட உள்ளது. எனவே சிறப்பு தரிசன டோக்கனை நாளை காலை 9 மணி முதல் www.tirupathibalaji.ap.gov.in என்ற இணையதள முகவரியை அணுகி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.