மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தால் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சத்யராஜுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட இவர் தனது வீட்டின் மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து விட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.