Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

100 அடி செல்போன் கோபுரத்தில்….. இறங்க முடியாமல் தவித்த வாலிபர்….. திருப்பூரில் பரபரப்பு….!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.என் ரோடு சந்திப்பில் இருக்கும் கட்டிடத்தின் மேல் மாடியில் 100 அடி செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் இந்த செல்போன் கோபுரத்தின் மீது ஒரு வாலிபர் ஏறி நின்று உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை கீழே இறங்குமாறு கூறி உள்ளனர்.

ஆனால் அவரால் செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்க இயலவில்லை. இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 80 அடி உயரத்தில் நின்ற அந்த வாலிபரை கயிறு கட்டி பாதுகாப்புடன் கீழே இறக்கிவிட்டனர்.

Categories

Tech |