Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனுக்கு நடந்த விபரீதம்…. துக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி காதலன் உயிரிழந்த துக்கத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் சரஸ்வதி என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் மேடவாக்கத்தில் உள்ள தனது அக்காள் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான ஊரணியில் வசிக்கும் ஒரு வாலிபரை சரஸ்வதி காதலித்து வந்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் அந்த வாலிபர் உயிரிழந்ததால் இறுதி சடங்குக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு சரஸ்வதி மீண்டும் சென்னையில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சரஸ்வதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பள்ளிக்கரணை காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சரஸ்வதியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |