உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஃபேஸ்புக் மெசேஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை 45 நிமிடங்கள் முடங்கியது. உலகம் முழுவதும் பேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து பயனாளர்கள் தொடர்ந்து புகார் கொடுத்ததை அடுத்து 45 நிமிடங்களுக்கு பிறகு நான்கு சமூக வலைத்தளங்களில் செயல்படத் தொடங்கின.