பெண்களின் நாள்பட்ட பிரச்சினையான வெள்ளைப்படுதலுக்கு சூரணம் தயாரிப்பதை பார்க்கலாம்.
உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் நோய். இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் நாள்பட்ட பிரச்சினையாக இருக்கும். அவர்கள் தங்கள் உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் நிறைந்த சூரணம் ஒன்றை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கீழாநெல்லி- 200 கிராம்
கோவைஇலை – 200 கிராம்
அசோகமரப்பட்டை – 100 கிராம்
நாவல்மரப்பட்டை – 100 கிராம்
செய்முறை:
முதலில் கீழாநெல்லி மற்றும் கோவை இலை இரண்டையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு வேண்டும். பின்பு அதை சுத்தப்படுத்தி நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அசோக மரப்பட்டை மற்றும் நாவல் மரப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்து சுத்தப் படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு காயவைக்கப்பட்ட கீழாநெல்லி இலை மற்றும் கோவை இலையை தனித்தனியாக அரைத்து கொள்ள வேண்டும். அசோக மரப்பட்டை மற்றும் நாவல் மரப்பட்டையை தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பொடியாக கடையில் வாங்குவதாக இருந்தால் அனைத்தும் தலா 50 கிராம் வாங்கி ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு பயன்படுத்தவும். இந்த சூரணம் தீராத நாள்பட்ட வெள்ளை படுதலை தீர்க்க உதவும் அருமருந்தாகும்.