Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஜாலியாக விளையாடியவர்கள்…. காவல்துறையினர் கொடுத்த அதிர்ச்சி…. கிரிஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வளத்தகவுண்டனூர் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போச்சம்பள்ளி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சில பேர் பணம் வைத்து சூதாடிய காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக வளவனூர் பகுதியில் வசித்து வரும் சின்னதுரை, சபரிநாதன், ராமமூர்த்தி, பெரியண்ணன் போன்ற நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும்  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |