Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு…. பாறையின் மீது மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த துயரம்…!!

சரக்கு வாகனம் பாறை மீது மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி கிராமத்தில் ஹரிஹரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செட்டி கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரக்கு வாகனத்தில் ஹரிஹரன் கட்டபெட்டு பகுதியிலிருந்து கோத்தகிரி நோக்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வேஸ்ட் புரூக் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் அங்கிருந்த பாறையின் மீது மோதிவிட்டது.

இதில் படுகாயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.இதனை பார்த்த வாகன ஓட்டிகள் கோத்தகிரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |