Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா….? இறந்து கிடந்த சிறுத்தை குட்டிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

இரண்டு சிறுத்தை குட்டிகள் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மங்கோ ரேஞ்ச் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு வயது பெண் சிறுத்தை குட்டி உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் தேவாலா வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தேயிலை செடிகளுக்கு இடையில் மேலும் இரண்டு சிறுத்தை குட்டிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகளான கூடலூர் வன அலுவலர், வனச்சரகர் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதனையடுத்து கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் சிறுத்தை குட்டிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஆண் சிறுத்தையும் பெண் சிறுத்தையும் இணையும் நேரத்தில் இடையூறாக இருந்ததால் குட்டிகளை சிறுத்தைகள் கடித்து விரட்டி இருக்கலாம் எனவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சிறுத்தை குட்டிகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அந்த சிறுத்தைகள் அப்பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |