இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அசோக்கும், அவரது நண்பர்களான ரஜினி, ராஜேஷ் போன்றோர் அந்த பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கோத்தகிரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த ஊட்டி மகளிர் நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு இவர்கள் 3 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற அன்று ரஜினிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 2 பேரும் சிறை தண்டனையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஐகோர்ட்டில் ராஜேஷ் மற்றும் அசோக் தண்டனையை குறைக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட ஊட்டி மகளிர் நீதிமன்றம் இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ் அசோக் போன்றோருக்கு தண்டனையை அதிகரித்து ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.