Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாக்கடையில் கொட்டப்படும் மனித கழிவுகள்…. நகராட்சி அலுவலர் சந்திக்க மறுப்பு…. கடை உரிமையாளர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

மதுரையில் வணிக வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை, வணிகம் சார்ந்த வளாகங்கள் போன்றவை உள்ளன. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள திறந்தவெளி சாக்கடையில் தனியார் சிலர் இரவு நேரங்களில் மனிதக்கழிவுகளை திறந்து விடுவதால் கால்வாய் நிரம்பி வெளியே வந்து பரவிக் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் சுகாதார சீர்கேட்டையும் உண்டாக்குகிறது.

இதனால் காலையில் பஸ்ஸிற்காக நிழற்குடைக்கு வரும் பயணிகளும், கடைகளில் பொருட்கள் வாங்க வரும் நபர்களும் துர்நாற்றத்தால் மிகவும் அவதியுறுகிறார்கள். ஆகையினால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அனைவரும் நகராட்சி அலுவலரிடம், நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார்கள். ஆனால் அவர்களை பார்க்க அலுவலர் மறுத்துவிட்டதால் அனைவரும் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |