Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… காங்கிரஸ் கட்சி வேட்பாளர்… கவுன்சிலர் பதவி ராஜினாமா..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் தேவகோட்டை அருகே நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியின் மகனான கருமாணிக்கம் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 3-வது வார்டு கவுன்சிலராக கண்ணங்குடி யூனியனில் இருந்தார். இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக கருமானிக்கம் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கண்ணங்குடி யூனியனில் இதனை முன்னிட்டு சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் தலைவர் மெய்யப்பன் என்ற சித்தாணூர் கார்த்திக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஆணையாளர் சரவணன், துணைத்தலைவர் சந்திரபோஸ், கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் கவுன்சிலரான கருமாணிக்கம் ராஜினாமா ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |