டாடா h2x கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா h2x கான்செப்ட் காரை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காண்பிக்கப்பட்டது. 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் முன்புறமாக புதிய கிரில் வடிவமைப்பும், ஸ்ப்லிட் ஹெட்லேம்பும், கூர்மையான பம்ப்பரும், வீல் ஆர்ச்களும் வழங்கப்பட்டுள்ளன.
டாடா ஹேரியர் போல காட்சியளிக்கும் இந்த புதிய காரை டாடா ஹார்ன்பில் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த h2x கான்செப்ட் கார் 3,840 மிமீ நீளமும், 1,822 மிமீ அகலமும், 1,635 மிமீ உயரம் கொண்டதாக்க இருக்கிறது. மேலும் இந்த புதிய காரின் சிறப்பம்சமாக 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷனும், மற்றும் 5-ஸ்பீடு மேனுவளையும் கொண்டுள்ளது.