நெல்லையில் காதல் தகராறில் போது 8 மாத குழந்தை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மகிழடியில் செவிலியர் ரோஸ்பிளசி என்பவர் வசித்துவருகிறார். அவரும் பணகுடி சிவசங்கரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து சிவசங்கரன் தனது காதலியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதனால் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தவறின் போது பெண்ணின் தந்தை ரசல்ராஜை அரிவாளால் வெட்ட சிவசங்கரன் முயற்சி செய்துள்ளார்.
அப்போது ரசல் ராஜ் தனது மற்றொரு மகளின் குழந்தையை வைத்து அரிவாள் வெட்டில் இருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். இதில் அரிவாள் வெட்டு 8 மாத குழந்தை அக்ஷயா குயின் மீது விழுந்தது. அதனால் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.