அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கமலா ஹரிஷை பார்த்து “ஜனாதிபதி” என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவர் ஜோ பைடன். இவர் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பதற்கு முன்பு அவரை பார்த்து ‘ஜனாதிபதி தேர்வு’ என்று வாய் தவறி அழைத்துள்ளார். இதனையடுத்து தற்போது மீண்டும் இவர் கமலா ஹாரிஷை பார்த்து ‘ஜனாதிபதி’ என்று அழைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பல்வேறு இணையதள வாசிகள் இதனை பார்த்து ஜோ பைடனுக்கு மனச்சோர்வினால் ஏற்படும் மூளை நோய் இருக்கிறதா? என்று கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே ஜோ பைடன் பேசிய உரையில் இருக்கும் சிறிய தவறை பெரிதாக பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து வரும் காலங்களில் கமலா ஹாரிஸ் நிச்சயமாக அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்று ஒரு சில இணையவாசிகள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
President Biden refers to Kamala Harris as 'President.' https://t.co/VlT7z8drtO pic.twitter.com/niNoByrGgT
— NEWSMAX (@NEWSMAX) March 18, 2021