மலேசிய நாட்டில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவரது உதவியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள வடகொரிய தலைவர்களும் அவர்களின் உதவியாளர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மலேசியா அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது . இதற்கு காரணம் கடந்த 2017 முதல் வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் உள்ள மலேசியா தூதரகம் செயல்பாட்டில் இல்லை .
அதனால் மலேசிய அரசாங்கம் வடகொரிய தலைவர்களும் அவர்களின் உதவியாளர்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளது.மேலும் வடகொரியா நாட்டவரான முன் சோல் மயோங் என்பவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்ககும் முடிவு என்பது விதி மீறல் இல்லை எனவும் சட்டத்திற்கு உட்பட்டதுதான் எனவும் அரசு தரப்பு விளக்கமளித்தது. மேலும் அவருக்கான உரிமைகள் எல்லாமே உரிய முறையில் தான் பின்பற்றி வருகிறது அவர் குடும்பத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு கூறியது .
ஆனால் இந்த பதிலால் அரசு அதிகாரிகளுக்கு திருப்தி இல்லை என்பதனால் வடகொரிய தூதரக அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களை அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.