Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி” உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… சூடு பிடிக்கும் தேர்தல் களம்….!!

ராணிப்பேட்டையில் தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்கு பதிவிற்காக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் தற்போது 2021 ஆண்டுக்கான  சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு தேர்தல் குழு பல தேர்தல் விதிமுறைகளையும், நடைமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்தனர். இதனைத் தொடர்ந்து நூறு சதவீத வாக்கு பதிவிற்காக அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் மேலவெங்கடாபுரம் கிராமத்தில் 100 சதவீத வாக்கு பதிவிற்காக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு கையெழுத்து போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் முதல் கையெழுத்திட்டு வாக்கு பதிவிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இதில் மகளிர் குழுவிலுள்ள பெண்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

Categories

Tech |