Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான ஸ்புட்னிக் வி தடுப்பூசி… இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம்…!!!

கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தை தயாரிக்க இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

சீனாவில்  தோன்றிய  கொரோனா வைரஸ் கடந்த  ஆண்டு மார்ச்  மாதம்  தொடங்கி உலகமெங்கிலும் உள்ள நாடுகளில் பரவ தொடங்கியது.அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .  அதற்க்கு   எதிரான தடுப்பூசி  கண்டறியும் முயற்சியில்  இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்  தீவிரம் காட்டி வந்தநிலையில்  தற்போது    கொராேனா  தடுப்பூசிகள்  உலகமுழுவதிலும்   போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில்  ரஷ்யா ஸ்புட்னிக் வி என்ற  தடுப்பு  மருந்தை  தயாரிக்க   இந்திய மருத்துவ ஸ்டெலிஸ் பயோப பார்மா நிறுவனத்துடன்ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இந்ததடுப்பூசி   91.6% பயனளிப்பதாக  கூறியுள்ளது.   மேலும்   தடுப்பூசி  அனைத்து  வயதினர்க்கும்  நிலையான  மற்றும்  வலுவான பாதுகாப்பை அளிக்கும்  என்று உறுதி அளித்தது.

மேலும் உலகம் முழுவதிலும்  உள்ள  பல்வேறு நாடுகளில்  மருத்துவ  நிறுவனங்களும் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகங்களும் இணைந்து தடுப்பு மருந்தை தயாரித்து வருகின்றன.  அவ்வாறு தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார மையத்தின் அனுமதியைப் பெற்று பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது . மேலும்  உலகில்  முதன் முதலில்  பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான   ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா  தடுப்பூசி தற்போது 50 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்த  தடுப்பூசியின்  2 வது டோஸ்கள் தற்போது  செலுத்தப்பட்டு வருகிறது.

Categories

Tech |