இங்கிலாந்தில் பூங்கா ஒன்றில் அதிகாலையில் ஜாக்கிங் சென்ற இளம்பெண்ணை தாக்கி தவறாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் West Sussex இருக்கும் சவுத் வாட்டர் என்ற பகுதியில் ஒரு நபர் தன் இரு சக்கர வாகனத்தின் அருகே நின்று செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் அந்த வழியாக ஜாக்கிங் சென்றுள்ளார். இந்த நபர் அந்த இளம்பெண்ணை தாக்கியதோடு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று துன்புறுத்தி ஆடைகளை கிழித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் கதறியிருக்கிறார். சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற ஒருவர் அருகில் சென்றதும் அந்த நபர் தன் பைக்கில் தப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அந்தப்பகுதியில் ஒரு முகக்கவசம் கிடந்துள்ளது.
அதனைக்கைப்பற்றிய காவல்துறையினர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதாவது கடந்த வருடம் அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று அதிகாலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன்பின்பு தொடர் விசாரணை மற்றும் தீவிர சோதனைகளுக்கு பின் காவல் துறையினர் உரிய ஆதாரங்களுடன் அந்த நபரை கைது செய்திருக்கின்றனர்.
இதன் படி அந்த நபரின் பெயர் Christopher cooper. 29 வயது இளைஞரான இவர் மரங்களை பாதுகாக்கக்கூடிய சிகிச்சைகள் அளிக்கும் நிபுணராக இருக்கிறார். அதாவது சம்பவத்தன்று அதிகாலையில் தன் பணிக்காக வந்தவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்திருக்கிறது. அதாவது காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட அந்த முகக்கவசத்தில் டிஎன்ஏ மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு இவரை கைது செய்துள்ளனர்.