மாங்கல்ய தோஷம் நீங்க 13 வயது மாணவனுடன் பொம்மை கல்யாணம் செய்து முதலிரவு நடத்திய டியூஷன் டீச்சர்.. அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர்..
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பஸ்திபாவா கெல் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு முழுநேர டியூஷன் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களிடம் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். பின்பு அந்த டியூசன் டீச்சருக்கு வரன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது ஜாதகம் பார்த்த பெற்றோர் இந்தப் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம் உள்ளது என்றும் இந்த தோஷத்தை கழிப்பதற்கு பொம்மை கல்யாணம் செய்தால் நீங்கிவிடும் என்று ஜாதகர் கூறியிருக்கிறார்.
அதன்பின் வீடு திரும்பிய பெற்றோரும், டியூஷன் டீச்சரும் யோசனை செய்து தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவர் ஒருவனை பொம்மை கல்யாணம் செய்ய ஒத்துழைக்க செய்தனர். டீச்சர் அந்த மாணவரிடம் தனது வீட்டில் ஒருவாரம் தங்கி படிக்க வேண்டும் என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு வா என்று அனுப்பியுள்ளார். அதேபோல் அந்த சிறுவனும் சொல்லிவிட்டு ஒருவாரம் டீச்சரின் வீட்டில் தங்கியுள்ளான். இந்த வாய்ப்பின் மூலம் அந்த சிறுவனிடம் டீச்சருக்கு கல்யாணம் நடந்தது, சாந்தி முகூர்த்தமும் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அதன்பிறகு அந்த சிறுவன் தனது வீட்டிற்கு சென்று விட்டான். அப்போது அந்த சிறுவனின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் பெற்றோர்களுக்கு சந்தேகம் எழுப்பியுள்ளது. அவனிடம் பெற்றோர்கள் கேட்டபோது அனைத்தையும் உளறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவனிடம் முழுமையாக விசாரித்தனர். அதற்கு ‘அவன் தன்னை கட்டாயப்படுத்தி அனைத்தையும் செய்ய சொன்னதாக’ சிறுவன் கூறினான்.
இதனை தாங்கிக்கொள்ள முடியாத சிறுவனின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது சிறுவனின் வீட்டாரை டீச்சர் சமாதானம் செய்துள்ளதாக தெரியவருகிறது. அதன்பின் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.