கர்நாடகாவில் ஆபாச வீடியோ புகாரின் சிக்கிய அமைச்சர் வழக்கில் ,சம்பந்தப்பட்ட இளம் பெண் கடத்தப்பட்டதாக அவரின் பெற்றோர் புகார் அளித்திருப்பது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சரான பாஜக ரமேஷ் ஜர்கிஹோலி ,ஆபாச வீடியோவில் இளம்பெண் ஒருவருடன் இருக்கும் வீடியோ ,சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பா அளித்தார். இதன் காரணமாக அமைச்சர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ,தன்னையும் தன் குடும்பத்தையும், அமைச்சரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியபோது ,’அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை’ என்றும், என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக இந்த காரியத்தை செய்துள்ளனர் ,என்று விசாரணையில் வாக்குமூலம் அளித்தார். இதுதொடர்பாக அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த முயற்சித்தபோது ,அப்பெண் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அவர் விசாரணைக்கு வராமல் தலைமறைவாக இருக்கிறார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் வழக்கில் திடீர் திருப்பமாக ,பாதிக்கப்பட்ட இளம்பெண் கடத்தப்பட்டுள்ளதாக அவரின் தந்தை பெலகாவி சிஎம்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரில், என்னுடைய மகள் பெங்களூரில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து, தனியார் விடுதியில் தங்கியிருந்தார். ஆனால் கடந்த 2ஆம் தேதியன்று, எனது மகனை கடத்திச் சென்று கொடுமைப்படுத்தி வருகின்றனர் . இதோடு ஆபாச வீடியோவில் இருப்பது என்னுடைய மகள் அல்ல என்றும், வேறு பெண்ணுக்கு பதிலாக என்னுடைய மகளின் முகத்தை போலியாக வைத்து அந்த வீடியோவில் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டுள்ளன. இதனால் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அவமானப்பட்டு ,அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறினார். எனவே போலீசார் என்னுடைய மகளை மீட்டு பாதுகாப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் தனிப்படை அமைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.