மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய வெர்ஷனில், எண்ட்ரி-லெவல் எஸ்.யு.வி. மாடலான 2020 ஜி.எல்.ஏ-ஐ அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அதன் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய காரை வெளிநாடுகளில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்பை படங்களின் மூலம் இந்த புதிய ஜி.எல்.ஏ. மாடல் ஏ-கிளாஸ் ஸ்டீராய்டுகளை தழுவி இருப்பது தெரிகிறது. மேலும் புதிய தலைமுறை வடிவமைப்பு கொண்ட இந்த காரின் தோற்றம் 2019 ஏ கிளாஸ் மாடலை ஒத்தி இருக்கிறது.
இந்த புதிய காரின் உள்புறம் அதிநவீன வடிவமைப்பும், சென்ட்ரல் கன்சோலுக்கு மாற்றாக இரண்டு டிஜிட்டல் டிஸ்ப்ளேக்ககூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்டரும் வழங்கப்பட்டிருக்கிறது. இவை பெரும்பாலும் தொடுதிரை வசதியையும், MBUX -ஐயும் கொண்டிருக்கும் என தெரிகிறது. எம்.எஃப்.ஏ. 2 பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ள இந்த காரில் 1.3 லிட்டர் பெட்ரோல் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் மெல்லிய ஹெட்லேம்ப்களும், டி.ஆர்.எல்.களும், 10-ஸ்போக் வீல்களும், ஸ்குவாட் ஸ்டான்ஷும் வழங்கப்படுகிறது.இதன் என்ஜின்-ஐ பொறுத்த வரை 163 பி.எஸ். பவர், 250 என்.எம். டார்க் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷனும் வருகிறது.இதன் உயர் ரக மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு யூனிட்டும் 224 பி.எஸ். பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 8 டி.சி.டி. டிரான்ஸ்மிஷன்,4-மேடிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கிறது.