Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ருதி ராஜ்… வெளியான தகவல்…!!!

நடிகை ஸ்ருதி ராஜ் புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இதை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையின் முன்னணி நடிகையாக உயர்ந்தார் . இதன்பின் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் சீரியலில் நடித்திருந்தார். இதையடுத்து மீண்டும் சன் டிவிக்கு வந்த ஸ்ருதிராஜ் அபூர்வ ராகங்கள் என்ற சீரியலில் நடித்தார்.

புதிய சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் முன்னணி நாயகி ! - Tamil Movie Cinema News

இதை தொடர்ந்து  ஸ்ருதி ராஜ் நடித்து வந்த அழகு சீரியல் கொரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஸ்ருதி ராஜ் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீரியலில் தெய்வமகள் கிருஷ்ணா நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |