ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்துவதில் தயாராக இல்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது முடிவே மாற்றியுள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசியதில் ,’அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை நான் எடுத்துக் கொள்ளப்போகிறேன் ‘என்று கூறியுள்ளார். கடந்த மாதம் தடுப்பூசி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பயனளிக்கவில்லை என்று தகவல் வெளியாகும் போது மெர்க்கல்,தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி பயன்படுத்துவதால் ரத்த உறைவு அபாயம் ஏற்படும் என்று பல கருத்துகள் வெளியாகியது. அதனால் பல ஐரோப்பிய நாடுகளும் தடுப்பூசி பயன்படுத்துவதை தடை செய்தது. ஆனால் தற்போது ஐரோப்பியன் மெடிகல் ஏஜன்ஸி மேற்கொண்ட ஆய்வில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ‘பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது’ என்று தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கல் தனது முடிவை மாற்றியுள்ளார்.