சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத எலக்ட்ரானிக் பூட்டை கண்டுபிடித்துள்ளது.
உலகின் மூலை முடுக்கெங்கும் நாளுக்கு நாள் ஏதாவது கண்டுபிடிப்புகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத பூட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த பூட்டு பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பேப்பர் போல இருக்கிறது. ஆனால் இது ஒரு எலக்ட்ரானிக் பூட்டு. இதனை வீட்டுக் கதவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் ஒட்டிக் கொள்ளலாம்.
திடீரென்று வீட்டில் திருடர்கள் வந்து விட்டால் அவர்கள் கதவின் பூட்டு எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். அவர்களின் கண்ணில் இது படவே படாது. இந்த எலக்ட்ரானிக் பூட்டை வீட்டின் கதவு அல்லது பணம் நகைகள் இருக்கும் பீரோ லாக்கர் போன்ற இடங்களில் நாம் ஒட்டிக்கொள்ளலாம். இந்த பூட்டு மிகவும் பாதுகாப்பானது என்று பாராட்டப்பட்டு வருகிறது. இது குறித்து வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் எலக்ட்ரானிக் பூட்டின் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்பதை அறிய முடிகிறது.