Categories
தேசிய செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி…. முதல்வரின் மகனுக்கு கொரோனா உறுதி…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆத்தியா தாக்கரேவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |