குழந்தைகள் விரும்பி சுவைக்கும் கோதுமை ரவா அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் :
கோதுமை ரவா : ஒரு கப்
சர்க்கரை : ஒரு கப்
சர்க்கரை சேர்க்காத பால்கோவா : ஒரு கப்
நெய் : அரை கப்
ஏலக்காய் பொடி : தேவையான அளவு
முந்திரி : தேவையான அளவு
பாதாம் பருப்பு : தேவையான அளவு
செய்முறை :-
குக்கரில் நெய்யை ஊற்றி , அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த சூட்டில் வறுக்கவும் .
சிறிது தண்ணீரை தனி பாத்திரத்தில் கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும் .
கோதுமை ரவை வாசனை வர ஆரம்பித்ததும் , தீயின் அளவை குறைத்து , சூடான நீரை எடுத்து மாவில் உற்றவும் .
தண்ணீர் தெறிக்கும் அதனால் மெதுவாக ஊற்றவும்.
பிறகு மூடி வைத்து , தீயின் அளவை குறைத்து சுமார் பத்து நிமிடங்கள் வேக விடவும் .
பின்னர் சிறிதளவு தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி சூடாக்கி அதில் சர்க்கரை , துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்து கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து கெட்டியாகி திரண்டு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும் .
பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி விடவும் .
இறக்கிய பின் அத்துடன் நறுக்கின முந்திரி , பாதம் கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும் .