நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான் . இந்த படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார் . இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார் . மேலும் இந்த படம் வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது .
The wait is over guys! #SulthanTrailer from
24th March, 5pm. #Sulthan #சுல்தான் @Karthi_Offl @iamRashmika @Bakkiyaraj_k #SulthanTrailerFromWednesday5pm#SulthanTrailerFromMarch24 pic.twitter.com/pZqRQJHJzP— DreamWarriorPictures (@DreamWarriorpic) March 20, 2021
இந்நிலையில் சுல்தான் படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 24-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது . ஏற்கனவே இந்தப் படத்தின் டீஸர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இந்த படத்தின் டிரைலரைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.