மும்பையில் முகக்கவசம் அணியாத பெண்ணிடம் அபராதம் கேட்ட மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் மார்ச் 19ஆம் தேதி 3062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சூழலில் மும்பை பெண் ஊழியர் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வந்த பெண்ணிடம் அபராதம் செலுத்தும்படி கேட்டுள்ளார். இதனால் அந்த பெண் பெண் ஊழியரை தவறான வார்த்தையில் திட்டி தாக்கியுள்ளார்.
@myBMC employee assaulted by Citizen when asked to pay fine for not wearing mask
If we have to beat 2nd tsunami wave we have to mask up & follow rules laid down else be prepared to be swept away#coronavirus #covid19 pic.twitter.com/23whHnOg89— ANDHERI LOKHANDWALA OSHIWARA CITIZEN'S ASSOCIATION (@AndheriLOCA) March 20, 2021
மேலும் அந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் தனது உயிரை பணையம் வைத்து பணியாற்றிவரும் மாநகராட்சி ஊழியரை இவ்வாறு கேவலமாக பேசிய பெண்ணே எதிர்த்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்