இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்தநாளை சியான் 60 படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
EXCLUSIVE – From The Set 🎬🎬
Our director @karthiksubbaraj 's birthday celebration with our dearest #ChiyaanVikram and #DhruvVikram..
The Gang #Chiyaan60 🔥🔥@Lalit_SevenScr @sooriaruna@proyuvraaj pic.twitter.com/EeTz9C8U3V
— Seven Screen Studio (@7screenstudio) March 20, 2021
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது பிறந்தநாளை சியான் 60 படக்குழுவினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.