மியான்மரில் 200 க்கும் அதிகமான மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மர் நாட்டில் ராணுவத்தின் அதிகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து போராடி வரும் மக்களில் சுமார் 235 நபர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனை மியான்மரின் சிவில் உரிமைகள் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும் கடந்த வியாழக்கிழமை அன்று உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்திருக்கிறது.
அதற்கு மறுநாளே மீண்டும் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் மேலும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதும் சிவில் உரிமைகள் குழு தெரிவித்துள்ளதாவது, ராணுவ சதித்திட்டம் தீட்டியதாக தற்போது வரை சுமார் 2330 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதாவது ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பொதுமக்கள் ஆங் சான் சூகியை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிகாரத்தை எதிர்த்தும் கடந்த 44 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் ராணுவம் தினந்தோறும் மக்களை கொன்று குவித்து வருகிறது. எனினும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். மேலும் உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மர் ராணுவ ஆட்சியின் சர்வாதிகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.