Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த வீடியோவை போட ரொம்ப யோசிச்சேன்’… நீச்சலுடையில் தொகுப்பாளினி டிடி… வைரல் வீடியோ…!!!

தொகுப்பாளினி டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி டிடி(திவ்ய தர்ஷினி). கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவ்வப்போது டிடி தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . இந்நிலையில் டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அதில் ‘ரொம்ப யோசித்தேன் இந்த வீடியோவை போடுவதற்கு.

என்னைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என முதலில் யோசித்தேன். ஆனால் நான் இந்த இடத்தை அடைவதற்கு 23 வருடங்கள் உழைத்திருக்கிறேன். அதனால் எனக்கு என்ன சந்தோஷம் தேவையோ அதை செய்ய எந்த தயக்கமும் இருக்கக் கூடாது என முடிவு செய்தேன் . தைரியமாக நான் விரும்புவதை செய்வேன்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது டிடி வெளியிட்ட வீடியோவிற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.

Categories

Tech |