பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை பெண் ஒருவர் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பெண்கள் பலரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். தண்டனைகள் கடுமையாக்கப்பட ஆளும் இந்த சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சிறு வயதுப் பெண் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அப்படி மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை பெண் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நிலையில் 45 வயது பெண், மகனுடன் இருந்துள்ளார். அப்போது வீட்டில் புகுந்த மர்ம நபர் பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 20 நிமிடங்கள் அந்த நபருடன் போராடிய பெண் இறுதியில் கட்டிலில் இருந்த அரிவாளை எடுத்து அந்த நபரின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.