மைதாமாவு – 500 கிராம்
சர்க்கரை – 450 கிராம்
முட்டை – 8
பிளம்ஸ் – சிறிதளவு
பட்டர் – 500 கிராம் (உருகியது)
வெண்ணிலா – 4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 4 டீஸ்பூன்
முந்திரிக்கொட்டை– சிறிதளவு
செய்முறை:
முதலில் மிக்சி ஜாரில் சர்க்கரை, முட்டையை போட்டு கரையும் வரை நன்கு அடிக்கவும். பின்பு வாணலியை வைத்து பட்டர் சேர்த்து நன்கு உருக்கி கொள்ளவும்
மேலும் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் அடித்த சர்க்கரை முட்டை கலவை, உருக்கிய பட்டரை சேர்த்து கலக்கி, கேக் அடிக்கும் பீட்டரினால் 20 நிமிடம் நன்கு அடிக்கவும்.
பின்பு கலக்கிய கலவையுடன் மைதாமாவு,வனிலா பிளம்ஸ், முந்திரி கொட்டை, பேக்கிங் பவுடரை சேர்த்து கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும்.
அதன் பின்பு அளவான ஒரு கேக்தட்டை எடுத்து, பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி, நன்கு சுற்றிலும் பரப்பி கொள்ளவும்.
அதனை அடுத்து அதை ஓவனில் 250 டிகிரியில் 20 நிமிடங்கள் வைத்துவேக வைத்து பேக் செய்து எடுத்து விரும்பிய வடிவில், அதை வெட்டி அதனை ஒரு தட்டில் வைத்து அடுக்கி பரிமாறினால் சுவையான பட்டர் கேக் ரெடி.