இந்தோனேஷியா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மாகாணத்தில் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் டிரிகானா ஏர் நிறுவனத்திற்குரிய 737 சரக்கு விமானம் தரை யிறங்கியுள்ளது. அப்போது திடீரென விமானம் ஓடு தளத்தை விட்டு நகர்ந்து ஓடி ஸ்கிட் அடித்து விபத்து ஏற்பட்டது.
https://twitter.com/breakingavnews/status/1373182928574889984
இதனால் உடனடியாக விமானத்தில் தீப்பற்றியது. இதனைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விமான நிலையத்துக்கு விரைந்தனர். அதன்பின்பு தீ அணைக்கப்பட்டது. நல்லவேளையாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. விமானம் மட்டும் சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும் விமானம் விபத்திற்குள்ளான காரணம் என்ன? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்துக்குள்ளான விமானத்தை நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஹலீம் பெர்தானகுசுமா விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்பு அடைந்திருக்கிறது.