வட அயர்லாந்தில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற குடியிருப்பு பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு வீடுகளில் கத்திக்குத்து சம்பவம் நடத்தியுள்ளனர். இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய இரண்டு வீடுகளில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு ஆணும், ஒரு பெண்ணும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், ஒரு பெண் இறந்து கிடப்பதையும் பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் இது பற்றி பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை தங்களிடம் தெரிவிக்கவும் என்று அங்கிருந்தவர்களிடம் போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகின்றது.