இரண்டு தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள ரஞ்சன்குடி கோட்டை முன்பு காவல் கோட்டையாக இருந்ததாகவும், அங்கிருந்து பல போர்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றாளர்கள் கூறுகின்றன. மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த காப்புக் காடுகள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. சோழர்கால வாலீஸ்வரர் ஆலயம், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் ஆலயம், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி ஆலயம் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை தலா 1 முறை வென்றுள்ளனர். தொகுதியின் தற்போதைய அதிமுக தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ அதிமுகவின் தமிழ்ச்செல்வன். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3,02,291 ஆகும். போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பாலக்கரை பகுதியை ஆத்தூர் மற்றும் துறையூர் சாலையுடன் இணைக்கும் வகையில் வயல் வடிவ மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
பால் மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்றும் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுகோள். புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் சின்னமுத்து நீர் தேக்கம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன. சின்ன வெங்காயத்திற்கான குளிர்பதனக் கிடங்கை சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என விவசாயிகளின் வலியுறுத்துகின்றனர். வேளாண் மற்றும் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. விபத்து, உயிரிழப்புகளை தடுக்க அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். விவசாயம் பிரதானமாக இருந்தாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி பெரம்பலூர். கட்டுமான துறை சரிவை சந்தித்து வரும் நிலையில் கட்டுமான தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.