மகாராஷ்டிரா மாநிலத்தில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவு வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா தொற்று இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சற்று குறைந்திருந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் நாக்பூர் மாவட்டத்தில் மார்ச் 31 வரை முழு ஊரடங்கு நீட்டித்து நாக்பூர் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மாலை 4 அனுமதி வழங்கப்படும். அவசியத் தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் புனே, அமராவதி, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.