Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு” மினி மாரத்தான் நிகழ்ச்சி…. உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்….!!

100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்துள்ளார்.

இதனையடுத்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டீ-ஷர்ட் மற்றும் தொப்பிகளை அணிந்து கொண்டு மாணவர்கள் கல்லூரியில் இருந்து தலைமை மருத்துவமனை, மாரியம்மன் கோவில் தெப்பக்குளம், கருமாதி மடம், புதிய பேருந்து நிலையம் வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று மாவட்ட விளையாட்டு அரங்கை சென்றடைதுள்ளனர். அதன்பின் மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் கலெக்டர் சான்றிதழ்களை வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார்.

Categories

Tech |