Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை…. சரமாரியாக தாக்கி கொண்ட இரு தரப்பினர்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் தனித்தனியாக இரு தரப்பினரும் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |