கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதால், தற்காப்புக்கு துப்பாக்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் பெரும் தோற்றால் இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூரி வருகின்றது, அதாவது மக்களிடையே வெறுப்புணர்வு அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்பது தெரியவருகிறது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸின் பெரும் தொற்று காரணமாக, மக்களிடையே தூண்டப்பட்ட ஆசிய விரோத வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதன் காரணமாக ஆசிய அமெரிக்கர்கள் பலரும் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துப்பாக்கிகளை வாங்குகிறார்கள் என்று அமெரிக்காவை சேர்ந்த துப்பாக்கி வணிகர்கள் தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக அமெரிக்காவில்,”துப்பாக்கிகளுடன் அதிக அளவில் ஆசிரியர்கள் அறிமுகப் படுத்தப் படுகிறார்கள் என்றும், இதற்கு முன்பாக ஆசிய சமூகத்தில் ஒரு போதும் துப்பாக்கி கலாச்சாரம் இருந்ததில்லை”என்றும் கடையின் உரிமையாளர் ஜம்மி காங் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக துப்பாக்கி விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்து இருக்கிறது என்றும் , கொரோனா தொற்று காலத்தில் நடந்த துப்பாக்கி வணிகத்தில் பாதி அளவு ஆசிய- அமெரிக்கர்கள் இருந்து வருமானம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக பெருகி வரும் துப்பாக்கி கலாச்சாரம் என்பது, ஆசிய-அமெரிக்கர்களை பொறுத்தவரை அச்சம் இன்னும் அதிகமாக காணப்படுகிறது என்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு நியாயமற்ற முறையில் ஆசிய மக்களை குற்றச்சாட்டும் சில இனவாதிகளின் தாக்குதலால் குறிவைக்கப்படும் அதே முக்கிய காரணம் என்றும் இதனால் ஆசிய எதிர்ப்புகளை அமெரிக்கர்கள் வெளிப்படுத்தி வருவதுமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, அந்நாட்டைச் சேர்ந்த அதிபர் ஜோ பைடன் “ஆசிரியர்களின் மீதான வெறுப்புணர்வை அமெரிக்காவினர் கைவிட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.