2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் பின்தங்கிய இந்தியா 144 வது இடம் பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஒன்றை ” ஐ நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க்”என்கிற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 144 வது இடம் பிடித்திருப்பது இந்திய மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பட்டியலில், மொத்தம் 149 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதில் 149 நாடுகளில் வாழும் அந்தந்த நாட்டு மக்களிடம் அவர்களின் வாழ்க்கை மதிப்பீடுகள், தனிமனித சுதந்திரம், சமூக ஆதரவு, மக்களின் நேர்மறை உணர்ச்சிகள் மற்றும் மறைமுக உணர்வுகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வு நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் தொடர்ந்து பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் முதலிடத்தை பிடித்து வருகின்றது. 2 ஆம் இடமாக டென்மார்க் நாடும் 3 ஆம் இடமாக சுவிட்சர்லாந்து இடம்பெற்று 149 நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் மிக முக்கியமான பல்வேறு உலக நாடுகள் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கும் இந்த பட்டியலில் 3. 173 புள்ளிகளுடன் இந்தியா 144 வது இடம் மட்டுமே கிடைத்து இருக்கிறது. ஆனால் 2019ஆம் ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்தியா 140 வது இடத்தை பிடித்திருந்தது. தொடர்ந்து மூன்று வருடங்களாக சரிந்து மிகவும் மோசமான நிலையில் பின்தங்கி 144வது இடத்தை பிடித்திருப்பது இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.